தமிழகம் வரும் பிரதமரை வரவேற்பது நம் கடமை : கனிமொழி எம்.பி. பேச்சு

pm tamilnadu kanimozhi
By Irumporai Jan 02, 2022 10:09 AM GMT
Report

மாநில அரசின் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வரும் பிரதமரை வரவேற்பது தமிழக அரசின் கடமை. மக்களுக்கு எதிரான திட்டங்களை ஒரு போதும் இந்த அரசும், திமுக வும் ஆதரிக்காது என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

லயோலா கல்லூரி மாற்று ஊடக மையம் மற்றும் இல்லம் தேடி கல்வி பள்ளிக்கல்வி துறை சார்பில் 9 ஆம் ஆண்டு வீதி விருது விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நடைபெற்றது.

அந்த நிகழ்ழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்பி :

பல்வேறு கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலைஞர்களுக்கு வழங்கி இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக கொண்டாடப்பட்டு வருவதாக கூறினார்.

அதே போல் திருவிழாக்கள் நடைபெறாமல் இருக்கும் பட்சத்தில் கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்க அரசு ஒரு வழிவகை செய்ய வேண்டும்என தெரிவித்தார்.

மேலும் பிரதமர் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ள கனிமொழி மாநில அரசின் திட்டங்களை தொடங்க வர இருக்கும் பிரதமரை வரவேற்பது நமது கடமையாகும்.

அரசியல் கருத்தியல் என்பது வேறு. சென்ற அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எதிராக கொண்டுவந்த சட்டங்கள் எதையும் திமுக என்றும் ஏற்றுக்கொள்ளாது. மக்களுக்கு எதிரான திட்டங்களை அரசாங்கம் ஒருபோதும் ஆதரிக்காது" என கூறினார்.