ஹிந்தி விவகாரத்தில் தமிழக அரசு அவதூறு பரப்பி வருகிறது : பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்
ஹிந்தி விவகாரத்தில் தேவையில்லாமல் அவதூறை தமிழக அரசு பரப்பி வருகிறது பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டியுள்ளார் திருச்சியில் மத்திய அரசின் கரீப் கல்யான் அண்ணா யோஜனா திட்டத்தை இன்று பா.ஜ.க. எம் .எல். ஏ. நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நயினர் நாகேந்திரன்:
மத்திய அரசு திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில் தமிழகத்திற்கு கரீப் கல்யாண் யோஜனா திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், மத்திய அரசு கொண்டு வரக்கூடிய திட்டம் தமிழக மக்களின் நலனுக்காக கட்டாயம் இருக்கும்.

சட்டசபையில் கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. காங்கிரஸ் கட்சி தோற்றதற்கு பல்வேறு காரணம் இருக்கிறது. தமிழகத்தில் தற்போது காங்கிரஸ் கட்சி இல்லை. எங்களின் கட்சி எப்பொழுதுமே ஹிந்தி மொழியை திணிப்பதை வழக்கமாக வைத்ததில்லை.
விருப்பமிருந்தால் ஹிந்தியை கற்றுக் கொள்ளலாம் ஆளும் கட்சியானது மத்திய அரசு பற்றி அவதூறு பரப்பி வருவதாக கூறினார்.