அண்ணன் சீர் திட்டம்.., 8 கிராம் தங்கம், பட்டு புடவை பெற விண்ணப்பிப்பது எப்படி?
Tamil Nadu Government's Annaiyar Seer Thittam- அண்ணன் சீர் திட்டத்திற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
வெயியிட்ட அறிக்கை
தமிழக அரசின் அண்ணன் சீர் திட்டத்தில் பயன்பெற, மணமக்கள் குறைந்தபட்ச சட்டப்பூர்வ திருமண வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.
மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். திருமணத்திற்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்காக அரசு இ-சேவை மையங்கள் அல்லது www.tnesevai.tn.gov.in இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.
அண்ணன் சீர் திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை ! தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியீடு ! #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | https://t.co/Clc4geebtQ
— TN DIPR (@TNDIPRNEWS) November 17, 2026
மேலும், மணப்பெண்ணின் பெயர் குடும்ப அட்டையில் இடம்பெற்றிருக்க வேண்டும். திருமண நிதியுதவி வழங்கும் வேறு அரசு திட்டங்களில் பயனடைந்திருக்க கூடாது.
விண்ணப்பத்தின் நிலை குறித்து விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணமும் தெரிவிக்கப்படும்.
இதையடுத்து, உரிய காரணத்தை அறிந்து மேல்முறையீடு செய்யலாம். கடந்த அக்டோபர் 5 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15 வரை நடைபெறும் திருமணங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டு புடவை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.