ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை : பொதுமக்களிடம் கருத்து கேட்கும் தமிழக அரசு

Tamil nadu Crime
By Irumporai Aug 07, 2022 06:48 AM GMT
Report

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தற்கொலைகள் அதிகரித்து வருவது தொடர்கதையாகியுள்ளது.ஆன்லைன் விளையாட்டைத் தடைசெய்யும் நோக்கில் 2020, நவம்பர் 21 அன்று எடப்படி தலைமையின அதிமுக அரசு ஒரு அவசரத் தடைச் சட்டத்தை உருவாக்கியது.

நீதி மன்றம் தடை

தமிழக அரசு கொண்டுவந்த தடைச் சட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. அவர்கள் வாதத்தின்படி இது திறமையை வெளிப்படுத்தும் விளையாட்டு; சூதாட்டம் அல்ல என்று நீதிமன்றத்திலேயே கூறினர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஆன்லைன் விளையாட்டுத் தடைச் சட்டம் அரசமைப்புக்கு விரோதமானது. மேலும், போதுமான காரணங்களின் அடிப்படையில் இந்தச் சட்டம் இயற்றப்படவில்லை .

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை :  பொதுமக்களிடம் கருத்து கேட்கும் தமிழக அரசு | Tamil Nadu Government Public Opinion Online Rummy

உரிய விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுக்குத் தடைவிதிக்க முடியாது. ஆகவே, உரிய விதிமுறைகளுடன் கூடிய புதிய சட்டம் கொண்டுவர வேண்டும்’ என்று கூறித் தமிழக அரசின் சட்டத்தை ரத்துசெய்தது.

கருத்து கேட்கும் தமிழக அரசு

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, ஆன்லைன் சட்டம் குறித்து ஆராய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழுவை அமைத்து,

இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை homesec@tn.govt.in என்ற மின்னஞ்சல் முகவரியில் வரும் 12-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.