அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக தொடக்கக் கல்வி இயக்குநர் பிறப்பித்துள்ள உத்தரவில்
தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும், அரசு நிதியுதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், சுயநிதியில் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் இளம் மழலையர் பள்ளிகள் ஆகியவை சார்பாக தொடக்க அனுமதி, அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் சார்பாக விவரங்களை அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது
துவக்க அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் அனைத்து இளம் மழலையர் பள்ளிகள், நர்சரி மற்றும் பள்ளிகள், சுயநிதி தொடக்க, நடுநிலை பள்ளிகள், உதவிபெறும் தொடக்கநிலை பள்ளிகளை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
துவக்க அங்கீகாரம், இல்லாமல் பள்ளிகள் செயல்படுமானால் , வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரே பொறுப்பேற்க நேரிடும்.
ஆகவே பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்த விவரத்தினை ஜூன் 20க்குள் இவ்வ அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.