ஆன்லைன் ரம்மி தடை மசோதா..! ஆளுநரின் கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பிய தமிழக அரசு
ஆன்லைன் விளையாட்டு தடை மசோதா குறித்து விளக்கம் கேட்டு ஆளுநர் அனுப்பிய கடிதத்திற்கு தமிழக அரசு விளக்கம் கொடுத்து பதில் கடிதம் அனுப்பியுள்ளது.
ஆளுநருக்கு தமிழக அரசு பதில் கடிதம்
கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க 6 வார கால அவகாசம் இம்மாதம் 27ஆம் தேதி முடிவடைய உள்ளது.
இதனை அடுத்து நேற்று ஆளுநர் ரவி ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தில் மசோதாவில் குறிப்பிடப்பட்டதை போல சட்டத்தை மீறினால் தண்டனை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறதா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்து தமிழக அரசு ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.