காதலினால் கூட தற்கொலை நடக்கிறது அதற்காக காதலிக்க கூடாது என சட்டம் இயற்ற முடியுமா? - ஹெச். ராஜா கேள்வி

tamilnadu neet hraja
By Irumporai Sep 12, 2021 10:48 PM GMT
Report

புதுக்கோட்டையில் நேற்று  செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, சேலத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வருத்தமளிப்பதாக கூறினார்.

மேலும், எந்த ஒரு இறப்பும் வருந்தத்தக்கது தான், அதேவேளையில் காதல் தோல்வியால் தான் பலர் உயிரிழக்கின்றனர், அதற்காக காதலே செய்யக் கூடாது என்ற சட்டம் இயற்ற முடியுமா, பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்தால் கூட சிலர் உயிரிழக்கின்றன.

அதற்காக அந்த தேர்வை ரத்து செய்து சட்டம் நிறைவேற்ற முடியுமா..? நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களை குழப்பக் கூடாது எனக் கூறிய ஹெச்.ராஜா ,நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தான் தேர்வுகள் நடத்தப்படுகிறது, இதற்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டால் அது சட்டத்தை அவமதிக்கும் செயல் என தெரிவித்தார்.