தமிழ்நாட்டில் கலர் அப்பளம் விற்பனைக்கு தடை!

Tamil nadu Government of Tamil Nadu
By Vinoja Jul 16, 2026 09:32 AM GMT
Report

அதிக அளவு செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலர் அப்பளங்களின் விற்பனைக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

கலர் அப்பளங்களை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டாம் என உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கலர் அப்பளம் விற்பனைக்கு தடை! | Tamil Nadu Government Bans Color Papad

ஆரோக்கிய பிரச்சினை

இவற்றை அடிக்கடி உட்கொள்வதால் செரிமானக் கோளாறு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதோடு, புற்றுநோய் ஏற்படும் அபாயமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகளுக்கு அலர்ஜி மற்றும் கவனச்சிதறல் போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கலர் அப்பளம் விற்பனைக்கு தடை! | Tamil Nadu Government Bans Color Papad

இதற்கு மாற்றாக, உளுந்து, அரிசி போன்ற பாரம்பரிய பொருட்களால் தயாரிக்கப்படும் அப்பளங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சந்தைகள், சுற்றுலாத் தளங்கள் மற்றும் பொருட்காட்சிகள் உள்ளிட்ட இடங்களில் கலர் அப்பளங்களை விற்பனை செய்யக் கூடாது என அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.