கொரோனா பரவல் – அரசு மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு

COVID-19
By Irumporai Dec 26, 2022 12:51 PM GMT
Report

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

சீனா, அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் இந்த வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசு அறிக்கை  

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

கொரோனா பரவல் – அரசு மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு | Tamil Nadu Government Action Government Hospitals

அதன்படி ஆறு மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்குமாறும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

தயாராக இருக்கவும்

மேலும் அவசரகால பயன்பாட்டிற்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை தயாராக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெண்டிலேட்டர் போன்ற தீவிர சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறும், கொரோனா பரிசோதனை சாதனங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய வகை கொரோனா பரவக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.