இனிமே மாஸ்க் அணியாவிட்டால் ஆப்பு தான் : அபராத தொகையை உயர்த்திய தமிழக அரசு
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.200-ல் இருந்து ரூ.500-ஆக அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என கூறியுள்ளது. பொங்கல் பண்டிகைக் காலத்தில் தொற்று பரவல் அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
எனவே கொரோனா பாதிப்பை குறைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆகையால் பொதுமக்கள் அதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.200-ல் இருந்து ரூ.500-ஆக அதிகரித்து தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
மாஸ்க் அணியும் போது மூக்கு மற்றும் வாய் முழுமையாக மூடியிருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூட கூடாது எனவும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.