தமிழகம் முழுவதும் இன்று ஊரடங்கு : இதற்கு மட்டுமே அனுமதி ,அரசு முக்கிய அறிவிப்பு

india lockdown tamilnadu
By Irumporai Jan 23, 2022 03:08 AM GMT
Report

கடந்த 2 வாரங்களாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில்,இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

அதன்படி,இன்று முதல் திங்கள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில்,இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,இரவு நேர ஊரடங்கு மற்றும் கடந்த 2 வாரங்களாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  

இந்த நிலையில் ,இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முன்னதாக அறிவித்திருந்தார்.

அதன்படி,இன்று முதல் திங்கள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,இந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த 16-1-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும் என்றும்,தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இரவு நேர ஊரடங்கு நேரத்தில் (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) கடைகள்,உணவகங்கள்,வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை.

எனினும்,இந்த புதிய கட்டுப்பாடுகளில்,அத்தியாவசிய பணிகளான பால்,பத்திரிகை விநியோகம்,மருத்துவமனைகள்,மருந்தகங்கள்,பெட்ரோல் பங்குகள்,ஆம்புலன்ஸ்,அமரர் ஊர்தி,ஏ.டி.எம்,சரக்கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள் போன்றவை மட்டும் இரவு நேரத்திலும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கில் மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள் அனுமதி. மாநிலங்களுக்கிடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து சேவைகள்(பயணத்தின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல்,கூட்ட நெரிசலைத் தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பதை தொடர்புடைய போக்குவரத்து நிறுவன நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். ஊரடங்கு நேரத்தில் உற்பத்தி தொழிற்சாலைகள்,தகவல் செயல்பட தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.

பணிக்கு செல்லும் பணியாளர்கள் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.

இருப்பினும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்துமாறு தொடர்புடைய நிறுவனங்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது. மெட்ரோ,புறநகர் ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

 இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது,பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இரயில் ஆகியவை இயங்காது. ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கின் போது,உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும்.

இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.ஆனால்,முழு ஊரடங்கின் போது மருந்துகள் மற்றும் பால் டெலிவரி செய்ய மின் வணிக நிறுவனங்களின் சேவை அனுமதிக்கப்படும்.

அரசு,தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் பொங்கல்,கலை நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.

 அத்தியாவசிய பணிகளான பால்,பத்திரிகை விநியோகம்,மருத்துவமனைகள், மருந்தகங்கள்,பெட்ரோல் பங்குகள்,ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி,ஏ.டி.எம்,சரக்கு வாகனங்கள்,எரிபொருள் வாகனங்கள் போன்றவை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால்,காய்கறி,மளிகை மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்பட அனுமதி இல்லை. மேலும்,வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி,சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள் இயக்கப்படும்.

செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும். auto cab மாவட்ட இரயில் நிலையங்களுக்கும் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும். டாஸ்மாக் கடைகள் செயல்படாது.

யுபிஎஸ்சி,டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு செல்வோருக்கு அனுமதி எனவும்,வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுக்கு செல்வோருக்கு அனுமதி எனவும்,எனினும்,அவர்கள் தேர்வுக்கூட அனுமதி சீட்டு,நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் ஆகியவற்றை காண்பித்து பயணம் மேற்கொள்ளலாம்.

தமிழகம் முழுவதும் இன்று ஊரடங்கு : இதற்கு மட்டுமே அனுமதி  ,அரசு முக்கிய அறிவிப்பு | Tamil Nadu From Today Only Government Important

முழு ஊரடங்கில் திருமண நிகழ்ச்சிக்கு செல்பவர்களுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட நிலையில்,திருமண அழைப்பிதழை வாகன சோதனையில் காண்பித்து விட்டு செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.