அத்து மீறும் இலங்கை - தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம்

srilanka boat fishing tamilnadu
By Irumporai Feb 07, 2022 05:21 AM GMT
Report

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்யும் சோக சம்பவம்  தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதோடு தமிழக மீனவர்களின்  படகுகளும் இலங்கை அரசால் பறிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக மீனவர்களிடமிருந்து ,கைப்பற்றப்பட்ட விசைப்படகுகளை தமிழக மீனவர்களுக்கு திருப்பித் தராமல் தன்வசம் வைத்திருந்த இலங்கை அரசு, அந்த படகுகளை ஏலம் விடப்போவதாக அறிவித்தது.  

இலங்கை அரசின் இந்த அறிவிப்பு மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துள்ளது. இதனால் இலங்கை அரசின் இந்த ஏலம் அறிவிப்பு உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றுபல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர் .

அத்து மீறும் இலங்கை  - தமிழக  மீனவர்களின் படகுகள் ஏலம் | Tamil Nadu Fishing Boats Auction By Srilanka Govt

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர்  ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதமும் எழுதினார், இந்நிலையில் இலங்கை அரசால் அரசுடமையாக்கப்பட்ட தமிழக மீன்பிடி விசைப் படகுகள் இன்று ஏலம் விடப்பட்டு வருகிறது .

பல ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அனுபவிக்கும் தொல்லைகள்  ஏராளாம் , தரை மேல் பிறக்க வைத்தான் எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான் கரை மேல் இருக்க வைத்தான் பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான் என்ற பாடல் வரிகள் போல , தமிழக மீனவ்ர்களின் வாழ்வாதாரம் மாறுமா ? காலம் தான் அதற்கான பதிலை கூற வேண்டும் .