தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில் ஏலம் : அதிர்ச்சியில் மீனவர்கள்

srilanka boat fisherman tamilnadu
By Irumporai Jan 23, 2022 04:43 AM GMT
Report

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த 105 படகுகளை ஏலம் விடுவதாக இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஏலம் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு நடைபெற உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி, இலங்கை கடற்படையினர் 105 படகுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளுக்கு ரூ.5 லட்சமும், நாட்டு படகுகளுக்கு ரூ.1.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என  தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில் ஏலம் : அதிர்ச்சியில் மீனவர்கள் | Tamil Nadu Fishermens Boats In Sri Lanka

 இந்த நிலையில் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த 105 படகுகளை ஏலம் விடுவதாக இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இந்த ஏலம் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு நடைபெற உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இலங்கை அரசின் இந்த முடிவு தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.