தொடரும் இங்கை கடற்படையின் அட்டூழியம் : தமிழக மீனவர்கள் 16 பேர் கைது

Indian fishermen
By Irumporai Mar 12, 2023 03:30 AM GMT
Report

கடந்த சில வருடங்களாகவே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது .

இலங்கை கடற்படை கைது

இந்த நிலையில், நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது அவ்வழியாக ரோந்து பணிக்காக வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி2 படகுகளில் இருந்த 16 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் மீனவர்களிடம் இருந்து 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

தொடரும் இங்கை கடற்படையின் அட்டூழியம் : தமிழக மீனவர்கள் 16 பேர் கைது | Tamil Nadu Fishermen Arrested Sri Lankan Navy

கைது தொடர் கைது

அங்கு நீதிமன்றத்தில் ஒப்படைத்து பின்னர் சிறை வைக்கப்படும் என கூறப்படுகின்றது.கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.