எல்லைதாண்டி மீன்பிடித்ததாக 7 தமிழக மீனவர்கள் கைது - மீனவர் சங்கம் கோரிக்கை

Sri Lanka Fish
By Pavi Jan 21, 2026 04:51 AM GMT
Report

நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 7 தமிழக மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 

சிறைபிடிக்கபட்ட மீனவர்கள்

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

மயிலாடுதுறை மீன்பிடி துறைமுகத்திலிருந்து இரண்டு நாட்டுப்படகுகளில் கடலுக்கு சென்ற மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் இருந்த இரண்டு நாட்டுப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக 7 தமிழக மீனவர்கள் கைது - மீனவர் சங்கம் கோரிக்கை | Tamil Nadu Fishermen Arrested Cross Border Fishing

கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்லும் போதெல்லாம் எல்லைதாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும், சில சமயங்களில் தாக்கி விரட்டியடிப்பதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக 7 தமிழக மீனவர்கள் கைது - மீனவர் சங்கம் கோரிக்கை | Tamil Nadu Fishermen Arrested Cross Border Fishing

இந்த தொடர் நடவடிக்கைகளால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் அவர்களது குடும்பங்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பி வழங்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.