தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கைக்கு எதிராக மக்கள் புரட்சி எழ வேண்டும் - சுப. வீரபாண்டியன்
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை அரசு மட்டும் தடுத்துவிட முடியாது. மக்களிடம் மிகப்பெரிய புரட்சி எழ வேண்டும் சுப. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த சுப.வீரபாண்டியன் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை அரசு மட்டும் தடுத்துவிட முடியாது.
மக்களிடம் மிகப்பெரிய புரட்சி எழ வேண்டும் என்றும் அதற்கு தமிழக அரசும் உறுதுணையாக நிற்கும் என்றும் கூறினார்.
இலங்கை அரசின் அட்டூழியத்தை மத்திய அரசு தட்டிக் கேட்க வேண்டும்.அதற்கான எழுச்சி தமிழகத்தில் ஏற்பட வேண்டும் என்றவர், கீழ் வெண்மணியில் அஞ்சலி செலுத்த சீமானுக்கு அனுமதி மறுக்கப் படவில்லை.
நாம் தமிழர் கட்சியின் கொடியை ஏந்தி செல்வதற்குத்தான் எதிர்ப்பு தெரிவித்தனர் என்றும், செருப்பு எடுத்து காட்டிய சீமானால் எப்படி அடுத்த தலைமுறைக்கு நாகரீகமான அரசியலை எடுத்து செல்ல முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர்கள் எந்த நியாயமும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் அவர்களை மீட்க தமிழக முதல்வர் பெரும் முயற்சி எடுத்துவருகிறார் என தெரிவித்தார்.