தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட அனுமதி கிடையாது
                                    
                    Douglas Devananda
                
                                                
                    Sri Lanka Cabinet
                
                                                
                    India
                
                                                
                    Sri Lanka Fisherman
                
                        
        
            
                
                By Thahir
            
            
                
                
            
        
    இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு மீனவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
தமிழக மீனவர்களுக்கு அனுமதி கிடையாது
அப்போது அவர் மீனவர்களிடம் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தமிழக மீனவர்கள் விசைப்படகுகள் பிடிக்கப்பட்டது குறித்து கேட்டபோது,

இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது என்றும் பாஸ் நடைமுறையும் இல்லை என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் தமிழக பாஜக தலைவரிடம் அரசாங்க ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.