நள்ளிரவில் தமிழக மீனவரை சுட்ட இந்திய கடற்படையினர் : காரணம் என்ன?

By Irumporai Oct 21, 2022 06:07 AM GMT
Report

நேற்று நள்ளிரவில் இந்திய எல்லையில் மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது .

கடலுக்கு சென்ற தமிழக மீனவர்கள்

மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர். நேற்று அவர்கள் கோடியக்கரை அருகே மீன் பித்ததாக தெரிகிறது.

நள்ளிரவில் தமிழக மீனவரை சுட்ட இந்திய கடற்படையினர் : காரணம் என்ன? | Tamil Nadu Fisherman Was Shot While Fishing

அந்த சமயம் ரோந்து பணியில் இருந்த இந்திய கடலோர காவல்படையினர், குறிப்பிட்ட அந்த படகு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அந்த படகை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு

அத்தனையும் மீறி அந்த படகு மீன்பிடித்த காரணத்தால் படகை நோக்கி காவல்படையினர் சுட்டதாகவும், அது தவறுதலாக மீனவர் வீரவேல் மீது தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் கடலோர காவல்படையினர் சார்பில் இதுகுறித்த விரிவான விளக்கம் வெளியாக வில்லை. மீதம் உள்ள 9 மீனவர்களிடமும் அதிகாரிகள் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.

நள்ளிரவில் தமிழக மீனவரை சுட்ட இந்திய கடற்படையினர் : காரணம் என்ன? | Tamil Nadu Fisherman Was Shot While Fishing

  முதலில் குண்டடிபட்ட மீனவர் வீரவேலுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காட்டது. பின்னர் அங்கு குண்டு அகற்றும் வசதி இல்லாத காரணத்தால் தற்போது மீனவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

முழங்கால், வயிற்று பகுதியில் மீனவர் வீரவேலுக்கு குண்டு பாய்ந்துள்ளளது என்பது குறிப்பிடதக்கது.