தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கை ரோந்து கப்பல் மோதல் - கச்சத் தீவு அருகே பதற்றம்
Conflict
Tamil Nadu fisherman
Sri Lankan patrol vessel
By Nandhini
கச்சத்தீவு அருகே இலங்கை ரோந்து கப்பல் மோதி ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் விசைப்படகு கடலில் மூழ்கி இருப்பதாக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நேற்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருக்கிறார்கள். அப்போது, கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை ரோந்து கப்பல் மோதியது.
இதில், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் படகு கடலில் மூழ்கியது.
தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை ரோந்து கப்பல் மோதிய நிலையில், கடலில் மூழ்கிய விசைப்படகில் இருந்த 7 மீனவர்களை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டு கரை சேர்த்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.