தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி - தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணி்ப்பு!

M K Stalin Tamil nadu DMK Election TVK
By Vinoja Apr 30, 2026 07:37 AM GMT
Report

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 23 ஆம் திகதி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. எதிர்வரும் மே 4 ஆம் அதிகதி வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கபடவுள்ளது.

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின் பிரகாரம் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி - தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணி்ப்பு! | Tamil Nadu Exit Polls 2026 Pollsters Back Stalin

அந்தவகையில்,  NDTV- PEOPLE'S PULSE நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகளும், அதிமுக கூட்டணி 65 முதல் 80 தொகுதிகளும் கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் தவெக 18 முதல் 24 தொகுதிகளும் மற்றவை 2 முதல் 6 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகள் வரை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கும் என REPUBLIC TV P MARQ கணித்துள்ளது.

அதிமுக கூட்டணி 65 முதல் 85 இடங்களையும், தவெக 16 முதல் 26 தொகுதிகளையும் கைப்பற்றும் எனவும், மற்றவை 1 முதல் 6 இடங்களை பெறும் எனவும் கணித்துள்ளது.

இதேபோல், MATRIZE நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 122 முதல் 132 தொகுதிகளும், அதிமுக கூட்டணி 87 முதல் 110 தொகுதிகளும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் தவெக 10 முதல் 12 தொகுதிகளிலும், மற்றவை 1 முதல் 6 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.