அடுத்த முதல்வர் ஸ்டாலினா? தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் பற்றிய காரசார விவாதம்
தமிழகத்தின் 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது, இதில் பதிவான வாக்குகள் வரும் மே 2-ந் தேதி எண்ணப்படும் நிலையில் அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதற்கான தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணுவதற்கான முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற இந்த சட்டசபை தேர்தலில் முதல் முறையாக 5 முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.
ரிபப்ளிக் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு
அதிமுக + பாஜக கூட்டணி – 58 -68
திமுக + காங்கிரஸ் கூட்டணி – 160 -170
அமமுக கூட்டணி – 04- 06
மற்றவை – 02
ஏபிபி – சிவோட்டர் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு
அதிமுக + பாஜக கூட்டணி – 64
திமுக + காங்கிரஸ் கூட்டணி – 166
மற்றவை – 04
டுடேஸ் சானக்யா வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு
அதிமுக + பாஜக கூட்டணி – 57
திமுக + காங்கிரஸ் கூட்டணி – 175
மற்றவை – 02
பெரும்பாலான கருத்துகணிப்புகள் திமுகவுக்கு ஆதரவாகவும், அதிக வாக்கு வித்தியாசத்துடன் வெற்றி பெறும் எனவும் திமுகவுக்கு சாதகமாகவே முடிவுகள் வந்துள்ளன.
இதுகுறித்து நமது யூடியூப் தளத்தில், காரசாரமான விவாதம் நடந்தது, இதில் திமுக சார்பில் ராஜீவ் காந்தி, அதிமுக சார்பில் புகழேந்தி மற்றும் இணைய ஊடகவியலாளர் ஐயன் கார்த்திகேயன் கலந்து கொண்டனர்.
இதில், தமிழகத்தின் தற்போதைய அரசியல் கள நிலவரம், தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் மற்றும், தேர்தலின் போது நடந்த நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதன் முழுமையான வீடியோவை காண,