தமிழ்நாடு தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு- முக்கிய விதிகள்

Tamil nadu India Election
By Vinoja Mar 23, 2026 07:47 AM GMT
Report

தேர்தல் வாக்கு பதிவு நாளிலும் அதற்கு முந்தைய நாளிலும் அச்சு ஊடகங்ளில் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை மாவட்ட ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முறையான முன் அனுமதி பெற்றதன் பின் மாத்திரமே வெளியிலாம்.

இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மாலதி ஹெலன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு- முக்கிய விதிகள் | Tamil Nadu Election Commission Issues Strict Rules

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026ல் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடுடப்பட்டுள்ளதாவது, பதிவு செய்யப்பட்ட எந்தவொரு அரசியல் கட்சியும், அல்லது அமைப்புகள்/சங்கங்களின் குழுவும், ஊடகங்களில் அல்லது போட்டியிடும் வேட்பாளர்/தனிநபரும், மின்னணு (தொலைக்காட்சி, வானொலி, பொது இடங்களில் உள்ள காட்சித் திரைகள், மின்- செய்தித்தாள்கள், மொத்த குறுஞ்செய்திகள்/குரல் செய்திகள் போன்றவை) மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் அனைத்து அரசியல் விளம்பரங்களையும், வெளியிடுவதற்கு முன்பாகவே செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் (MCMC) சமர்ப்பித்து முன் சான்றிதழ் பெற வேண்டும்.

முக்கிய விதிகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் தனிநபர்கள் அல்லது போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் விளம்பரங்களுக்கான சான்றிதழைப் பெற செங்கல்பட்டு மாவட்ட அளவிலான MCMC-யிடம் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மாவட்ட/மாநில அளவிலான CMC-களின் முடிவுகளுக்கு எதிராகச் செய்யப்படும் மேல்முறையீடுகளைப் பரிசீலிப்பதற்காக, மாநில அளவில் தலைமைத் தேர்தல் அதிகாரியின் (CEO) தலைமையில் ஒரு மேல்முறையீட்டுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள், அந்தந்த MCMC-யிடம் முன் சான்றிதழ் பெறாமல், சமூக ஊடக இணையதளங்கள் உட்பட இணையம் சார்ந்த எந்தவொரு ஊடகத்திலும் அல்லது இணையதளத்திலும் அரசியல் விளம்பரங்களை வெளியிடக்கூடாது. ஊடகங்களில் 'பணம் கொடுத்து வெளியிடப்படும் செய்திகள்' (Paid News) இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நிகழ்வுகளை MCMC-க்கள் தீவிரமாகக் கண்காணித்து, அவற்றின் மீது தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன், வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்யும் சமயத்தில் சமர்ப்பிக்கும் உறுதிமொழிப் பத்திரத்தில், தங்கள் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகளின் விவரங்களையும் கட்டாயமாகப் பகிர வேண்டும்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 77(1)-இன் படியும், இந்திய உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின் படியும், சட்டமன்றத் தேர்தல்கள் நிறைவடைந்த 75 நாட்களுக்குள், இணையம் (சமூக ஊடக இணையதளங்கள் உட்பட) வாயிலாக மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பிரச்சாரச் செலவுகள் குறித்த விவர அறிக்கையை அரசியல் கட்சிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு- முக்கிய விதிகள் | Tamil Nadu Election Commission Issues Strict Rules

செலவு கணக்கு தொடர்பில்,

இத்தகைய செலவினங்களில், பிற அம்சங்களுடன் சேர்த்து, விளம்பரங்களை வெளியிடுவதற்காக இணைய நிறுவனங்களுக்கும் இணையதளங்களுக்கும் செய்யப்பட்ட செலவுகள்; பிரச்சாரத்திற்கான உள்ளடக்கத்தை உருவாக்குவதில் ஏற்பட்ட செலவுகள்; மற்றும் அரசியல் கட்சிகளின் சமூக ஊடகக் கணக்குகளைப் பராமரிப்பதற்கான நிர்வாகச் செலவுகள் ஆகியவையும் அடங்கும்.

மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி, வாக்குபதிவிற்கு முந்தைய 48 மணி நேரத்திற்கு முன்னரே அனைத்து விதமான மின்னணு ஊடகங்களில் வெளியிடப்படும் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் நிறுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், வாக்குப்பதிவு நாள் (23.04.2026) மற்றும் வாக்குப்பதிவிற்கு முந்தைய நாளில் (22.04.2026) அச்சு ஊடகங்களில் மாவட்ட ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழுவின் அனுமதி பெற்று வெளியிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 வாக்குப்பதிவு நடைபெறும் நாளான 23.04.2026 வியாழக்கிழமை மற்றும் வாக்குப்பதிவிற்கு முந்தைய நாளான 22.04.2026 புதன்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் அரசியல் கட்சிகளோ, வேட்பாளர்களோ, தொலைக்காட்சி, வானொலி, தொலைபேசி குறுஞ்செய்திகள் மற்றும் குரல் பதிவு செய்தி, சமூக ஊடகங்களில் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிட தடைவிதிக்கப்படுகிறது.

எனினும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் அச்சு ஊடகங்களில் (நாளிதழ்களில்) தேர்தல் தொடர்பான விளம்பரங்களை மாவட்ட ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவின் அனுமதி பெற்று வெளியிடலாம்.

எனவே, 21.04.2026 மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் 23.04.2026 அன்று மாலை 6 மணி வரையிலான 48 மணி நேரத்திற்கு அச்சு ஊடகங்களில் (நாளிதழ்களில்) தேர்தல் சம்பந்தமான விளம்பரங்கள் வெளியிட விரும்பும் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் 2 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பித்து மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழுவிடம் அனுமதிச் சான்று பெற்று விளம்பரங்களை வெளியிடலாம்.

தேர்தல் நடத்தை விதிகள் விளம்பரங்களை வெளியிடும் செய்தி நிறுவனங்களும் மேற்காணும் நடைமுறைகளை நடைமுறையினை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் அச்சு ஊடக நிறுவனங்கள் ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழுவின் அனுமதி சான்றிதழ் இருப்பதை உறுதி செய்துக்கொண்டு அனுமதி எண்ணை விளம்பரத்தில் குறிப்பிட்டு வெளியிட வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவினை அனைத்து வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அவர்களின் முகவர்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும்,  இதனை கடைபிடிக்க தவறும் பட்சத்தில், சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.