போதைப்பொருள் புழக்கத்துக்கு காவல்துறையினரே பொறுப்பு - டிஜிபி அதிரடி உத்தரவு

Tamil nadu
By Vinoja Nov 15, 2026 08:29 AM GMT
Report

தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் வகையில், காவல்துறையினருக்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஒரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருள் உட்கொண்டதால் யாரேனும் உயிரிழந்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் பணி நீக்கம் செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் புழக்கத்துக்கு காவல்துறையினரே பொறுப்பு - டிஜிபி அதிரடி உத்தரவு | Tamil Nadu Dgp Issues Stern Warning Over Drug

காவல்துறையினர் மீது பணி நீக்க நடவடிக்கை 

அதேபோல், மத்திய விசாரணை அமைப்புகள் ஒரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருட்களைக் கைப்பற்றினாலும், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் அல்லது மெத்தனப்போக்குடன் செயல்படும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஜிபி குறிப்பிட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, அனைத்துப் பிரிவு காவல் அதிகாரிகள், காவல் துணை ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தங்களது பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி, பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் குறித்து இந்த வாரம் நடைபெற்ற வாராந்திர காவல் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டிஜிபி இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.