தமிழகத்தில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி தமிழகத்தில் இன்று மட்டும் 1,631 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 930 பேர் ஆண்கள், 701 பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 30 ஆயிரத்து 592 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 304ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 293 பரிசோதனை மையங்கள் உள்ளன. அதே சமயம் இன்று மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளார். 7பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 18 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 119 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,523பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 79 ஆயிரத்து 168 ஆக அதிகரித்துள்ளது.எனக் குறிப்பிடப்பட்டுள்ளது