தமிழகத்தில் இன்று 1,596 பேருக்கு கொரோனா : 21 பேர் பலி

corona tamilnadu
By Irumporai Sep 09, 2021 01:13 PM GMT
Report

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி கடந்த 24 மணி நேரத்தில் த 1,596 பேருக்கு கொரோனாதொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதே சமயம் தமிழகத்தில் இன்று மட்டும் 1,534 பேர் குணமடைந்துள்ளதாகவும் , இன்று மட்டும் 21 பேர் பலியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.

தலைநகர் சென்னையில் மேலும் 186 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 21 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,094 ஆக உயர்ந்துள்ளது.