தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா
corona
tamilnadu
By Irumporai
தமிழகத்தில் இன்று மேலும் 1,568 -பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி : தமிழகத்தில்கடந்த 24 மணிநேரத்தில் 1,568 - பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகபட்சமாக கோவையில் 239- பேருக்கும், சென்னையில் 162 பேருக்கும், ஈரோட்டில் 125 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று மட்டும் 1,657- பேர் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனா்.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதிப்பு காரணாமாக 19 பேர் பலியாகியுள்ளனர் இதன் மூலம் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,980-ஆக அதிகரித்துள்ளது.