தமிழகத்தில் புதிதாக 1,509 பேருக்கு கொரோனா : 20 பேர் பலி
CORONA
TAMILNADU
By Irumporai
தமிழகத்தில் நேற்று 1,512 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று குறைந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழகத்தில் புதிதாக 1,509 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்படோர் எண்ணிக்கை 26,16,381-ஆக உயர்ந்துள்ளது.
இன்று பலி எண்ணிக்கை 20-ஆக குறைந்துள்ளது. அதே சமயம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,941-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து இன்று மட்டும் 1,719 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,64,820-ஆக அதிகரித்துள்ளது.