மேகதாது அணை விவகாரம்.., பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்லும் முதல்வர் விஜய்?
Tamil nadu cm vijay meets pm modi- தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வரும் திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமரை சந்திக்கும் முதல்வர்
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
மேலும், 5,400 ஏக்கர் நிலப்பரப்பில் அணை கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், வனத்துறையின் அனுமதி கிடைத்ததும் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதற்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், உச்ச நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையைக் கட்டக்கூடாது என்றும் வலியுறுத்தினர்.

இதற்கிடையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், வரும் திங்கட்கிழமை டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடியை நேரில் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பின்போது மேகதாது அணை விவகாரம் மட்டுமின்றி, தமிழகத்தின் முக்கியப் பிரச்சனைகள் குறித்தும் பிரதமருடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.