முதல்வரின் கர்நாடகா பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்- அமைச்சர் நிர்மல் குமார்

Vijay Karnataka
By Yashini Jul 31, 2026 07:15 PM GMT
Report

முதலமைச்சர் விஜயின் கர்நாடகா பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறியதாவது..,

இது தமிழ்நாடு - கர்நாடகா இடையேயான பிரச்சினை என்பதால் முதலமைச்சர் அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு வருகிறார்.

பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து அதிமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது தேவையற்றது.

காவிரி ஆணையம் உத்தரவிட்ட பிறகும் கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கிறது.

முதல்வரின் கர்நாடகா பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்- அமைச்சர் நிர்மல் குமார் | Tamil Nadu Cm Vijay Karnataka Visit Decision

மேகதாது விவகாரத்தில் சட்ட நடவடிக்கை குறித்து சில நாட்களில் அறிவிப்பு வெளியாகும்.

முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வாரா என்பது பற்றியும் விரைவில் தகவல் வெளியிடப்படும்.

கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுப்பதே கர்நாடகாவின் அரசியல் நிலைப்பாடாக உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.