போராட்ட அச்சம்: தமிழ்நாடு முதலமைச்சரின் கர்நாடக பயணத்தை தள்ளிவைக்க வேண்டுகோள்

Tamil nadu Karnataka C Joseph Vijay
By Vinoja Jul 31, 2026 10:09 AM GMT
Report

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூருவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்திக்கலாம் என்ற தகவல்கள் வெளியான நிலையில், தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு அந்தச் சந்திப்பைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பயணத்தை தள்ளிவைக்க வேண்டுகோள்

காவிரி விவகாரம் குறித்து நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

போராட்ட அச்சம்: தமிழ்நாடு முதலமைச்சரின் கர்நாடக பயணத்தை தள்ளிவைக்க வேண்டுகோள் | Tamil Nadu Cm Should Not Come To Karnataka

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா வரும்போது போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால், தற்போதைய சூழலில் பயணத்தைத் தவிர்த்து, உரிய சூழல் உருவான பிறகு வேறு ஒரு தேதியில் சந்தித்து பேசலாம் என தொலைபேசி மூலம் கேட்டுக்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், காவிரி மேலாண்மை ஆணையத்தின் நீர் திறப்பு உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், கர்நாடகத்தின் நிலைப்பாட்டை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் எடுத்துரைத்துள்ளதாகவும் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.