Wednesday, Mar 5, 2025

சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டிருக்கும் தீர்மானம் ஏனோதனா என கொண்டுவரப்படவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin Government of Tamil Nadu
By Thahir 2 years ago
Report

சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டிருக்கும் தீர்மானம் ஏனோதனா என கொண்டுவரப்படவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்

சட்டப்பேரவையில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் வழங்க உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.

tamil-nadu-cm-separate-resolution-in-assembly

வரலாற்று ரீதியாகவே ஆதி திராவிடர் வகுப்பினராக இருக்கும்போது அவர்களுக்கு பட்டியலின வகுப்புக்கான உரிமையை வழங்குவதே சரியானது. மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு.

ஜாதி என்பது மாறுதலுக்கு உட்பட்டது அல்ல ஜாதி ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே ஜாதியை வைத்தே இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைக்கும் தத்துவம்தான் சமூகநீதித் தத்துவம் என முதல்வர் பேசியிருந்தார்.

பாஜக வெளிநடப்பு 

இந்த நிலையில், கிறிஸ்தவ ஆதி திராவிடர்களுக்கு இடஒதுக்கீடு கோரும் முதலமைச்சரின் தீர்மானம் மீதி வானதி சீனிவாசன் பேசியிருந்தார்.

வானதி சீனிவாசனின் பேச்சை அவை குறிப்பிலிருந்து நீங்கியதால், பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு செய்துள்ளது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தனித்தீர்மானத்தை கண்டித்து வெளிநடப்பு செய்த பாஜக உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

முதலமைச்சர் பதிலடி 

அவர் கூறுகையில், சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டிருக்கு தீர்மானம் ஏனோதானோ என கொண்டுவரப்படவில்லை,

இந்த தீர்மானத்தின் மீது பல்வேறு கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு, சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசிய பிறகுதான் இதனை முன்மொழிந்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.