தீவிர உடற்பயிற்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - இணையத்தில் வைரலாகும் வீடியோ
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அரசு மற்றும் கட்சி பணிகளுக்கு இடையிலும், அரசியல் சூழலில் பரபரப்பாக இருந்தாலும் காலை, மாலை வேளைகளில் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சைக்கிள் ஓட்டுவதிலும் ஆர்வம் கொண்ட முதலமைச்சர், இந்த பயணத்தின்போது மக்களையும் சந்தித்து அவர்களையும் உற்சாகப்படுத்துகிறார்.
சைக்கிள் பயிற்சி மட்டுமின்றி நடைப்பயிற்சி மேற்கொள்ளும் முதல்வர் இயந்திரங்களின் உதவியுடன் உடற்பயிற்சியும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்திலேயே அமைந்துள்ள உடற்பயிற்சி அறையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பயிற்சி எடுக்கும் வீடியோ காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தீவிர உடற்பயிற்சியில் முதலமைச்சர் @mkstalin pic.twitter.com/VIWrVOjpkg
— Vignesh Theni (@Vignesh_twitz) December 26, 2021
ஆட்சி, கட்சி பணிகளுக்கு இடையிலும் தீவிர உடற்பயிற்சியை மேற்கொள்ளும் முதலமைச்சர் தொடர்ந்து தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு, மக்களையும் அவ்வாறு செய்யும்படி தூண்டுகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது