நான் கோரிக்கை வைப்பவனாக தான் நான் இங்கே வந்திருக்கிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Aug 06, 2022 06:23 AM GMT
Report

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர்

அப்போது பேசிய அவர் சில அறிவிப்புகளை வெளியிட்டார்;

தமிழக மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

M K Stalin

பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் ஆணையத்தின் விசாரணை குழுவில் காவல்துறையினரின் எண்ணிக்கை குறித்தும் விரைவில் ஆய்வு செய்து முடிவு செய்யப்படும்.

மனித உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர்கள் விழிம்பு நிலை மக்களுக்காக போராடி வருபவர்களையும் இதில் எப்படி பயன்படுத்தி கொள்வது என்பது குறித்து ஆராயப்படும்.

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும் மனித உரிமைகள் தகவல்கள் அனைத்தும் அனைத்து மக்களிடம் சென்றடைய தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிடப்படும்.

மனித உரிமை கொள்கை, கோட்பாடுகள் குறித்தும் மனித உரிமைகள் கொள்ளை கோட்பாடுகள் குறித்தும் அதனை எந்த வகையில் பின்பற்ற வேண்டும் என்பது பற்றியும் அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்த பயிற்சி முகாம்கள் நடத்தப்படும்.

எந்த ஒரு தனி மனிதனின் உரிமையும் மீறப்படக் கூடாது. எத்தகைய சமூகமும் எதன் பொருட்டும் இழிவுப்படுத்த கூடாது இதற்கு காரணமான யாரும் சட்டத்தின் பார்வையில் இருந்து தப்பி விடக்கூடாது.

இவை மூன்றும் தான் இந்த அரசினுடைய மனித உரிமைகள் கொள்கை என்பதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிப்பதாக அவர் தெரிவித்தார்.

கோரிக்கை வைத்த முதலமைச்சர்

மேலும் உச்சநீதி மன்றம், உயர்நீதிமன்றம் நீதிபதிகள் பங்கேற்றக் கூட்டத்தில் சில கோரிக்கைகளை முன்வைத்தார்.

பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நலனை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்ற கிளை சென்னையில் அமைய ஏற்பாடு செய்ய வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை ஆக்க வேண்டும். இது சட்டத்தின் ஆட்சியில் மக்களின் கோரிக்கையாக அமைந்துள்ளன.

நான் கோரிக்கை வைப்பவனாக தான் நான் இங்கே வந்திருக்கிறேன் என்பதை நீதியரசர்கள் அறிவார்கள் என நான் நம்புகிறேன்.

சட்டத்தின் அரசாக,நீதியின் அரசாக அதுவும் சமூகநீதியின் அரசாக அமைவது என்பது தான் மக்களின் அரசாக அமைய முடியும் என்று தெரிவித்தார்.