முப்படைகளின் தலைமை தளபதி : பிபின் ராவத் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த 13 பேரின் உடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தொடங்கியது. வெல்லிங்டன் ராணுவ சதுக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவர்களது உடல்களுக்கு முப்படை தளபதிகள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உயரதிகாரிகள் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் புதன்கிழமை பலியாகினர்.
இதையடுத்து வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவர்களின் உடல்களை அங்கிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று ராணுவ வாகனங்கள் மூலம் மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டருக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
Tamil Nadu CM MK Stalin pays floral tribute to CDS Bipin Rawat and others who died in the Coonoor chopper crash, at Madras Regimental Centre in Nilgiris district pic.twitter.com/1b9vB0yOct
— ANI (@ANI) December 9, 2021