69வது பிறந்த நாள் தலைவர்கள் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திமுக
ChiefMinister
MKStalinBirthday
TamilnaduCM
DMKCelebration
By Thahir
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா,கருணாநிதி நினைவிடங்களில் மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையடுத்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனிடையே தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.