தமிழக அமைச்சரவை அதிரடி மாற்றம் - ஐ.பெரியசாமியின் ஆசையை நிறைவேற்றிய முதலமைச்சர்
உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக பதவியேற்ற நிலையில் அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை ஆளுநர் மாளிகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதிஸ்டாலின்.
அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம்? என்றால் யார் யாருக்கு எந்தெந்த துறை வழங்க வாய்ப்பு என்பதை பார்க்கலாம்
துறைகள் மாற்றம்
அமைச்சர் ஐ. பெரியசாமி - ஊரக வளர்ச்சித்துறை
அமைச்சர் மெய்யநாதன் - சுற்றுச்சூழல் துறை
அமைச்சர் மதிவேந்தன் - வனத்துறை
அமைச்சர் ராமச்சந்திரன் - சுற்றுலாத்துறை
கூடுதல் துறைகள் ஒதுக்கீடு
அமைச்சர் சேகர் பாபு - சென்னை பெருநகர மேம்பாட்டுத்துறை
அமைச்சர் காந்தி - நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்கும் கூடுதல் துறை
அமைச்சர் ராஜகண்ணப்பன் - சீர்மரப்பினர், காதி மற்றும் கிராம தொழில் வாரியத்துறை
அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் - புள்ளியல் துறை கூடுதல் துறை ஒதுக்கீடு
தொடர்ந்து தனது துறையை மாற்றி கேட்டு வந்த ஐ.பெரியசாமியின் துறையை மாற்றி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரின் ஆசையை முதலமைச்சர் நிறைவேற்றி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.