முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!

M K Stalin Tamil nadu DMK
By Vidhya Senthil Feb 25, 2025 02:17 AM GMT
Report

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

 மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் அடுத்த மாதம் மார்ச் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனிடையே, பொது மற்றும் வேளாண் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்! | Tamil Nadu Cabinet Meeting Today

கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த பணிகள் நடந்து வந்தன.இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

நாங்களும் வரியை நிறுத்த ஒரு நொடி போதும் - கொதித்த முதல்வர் ஸ்டாலின்!

நாங்களும் வரியை நிறுத்த ஒரு நொடி போதும் - கொதித்த முதல்வர் ஸ்டாலின்!

அமைச்சரவை கூட்டம் 

இந்த கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.அதில் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இன்னும் கூடுதலாக ஏதேனும் திட்டங்களை அமல்படுத்த முடியுமா? என்பது குறித்து ஆலோசித்து மேற்கொள்ளப்பட உள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்! | Tamil Nadu Cabinet Meeting Today

குறிப்பாக தேர்தலுக்கு முந்தைய முழுமையான பட்ஜெட் கூட்டத் தொடர் என்பதால், புதிய அறிவிப்புகள் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.