ஜனவரி 4ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்
ஜனவரி 4ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டம்
2023ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் பொங்கல் விடுமுறை கழித்து தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 4ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். முதன் முறையாக புதியதாக பதவியேற்ற அமைச்சர் உதயநிதியும் இதில் பங்கேற்கிறார்.
இதில் , சட்டப்பேரவை துவங்கும் போது அதில் ஆளுநர் உரையில் இடம்பெறஉள்ளவை, புதிய சட்ட மசோதாக்கள், துறைகள் மாற்றப்பட்டு, புதிய பொறுப்பேற்ற அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.