தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு - ஆன்லைன் ரம்மிக்கு தடை?
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றது.
அமைச்சரவை கூட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் கொண்டு வருவது குறித்து ஆலேசானை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய தொழில் முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை,
துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை, புதிய தொழில் முதலீடுகள் ஈர்ப்பது, வேலை வாய்ப்பினை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டது.
அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தடைச்சட்டம் கொண்டு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.