தமிழக அமைச்சரவை கூட்டம் தேதி மாற்றம் - வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழக முதலமைச்சரின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் வருகின்ற ஆகஸ்ட் 29 ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூடும் தேதி மாற்றம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது அதனை மாற்றம் செய்து அமைச்சரவை கூட்டம் வருகின்ற ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று, மாலை 6 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக்கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையம், அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம், ஆன்-லைன் ரம்மிக்கு தடை, புதிய தொழிற்கொள்கை உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் முதல்வர் பல திட்டங்களின் செயல்பாடுகளை குறித்து அமைச்சர்களிடம் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.