மார்ச் 5ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
வரும் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து தேர்தல் முடிவுகள் வெளியானது. பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி வாகை சூடியது.
இதையடுத்து வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவியேற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 5ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
மார்ச் 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.