பொதுவெளியில் கவனத்துடன் பேச வேண்டும் - அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
பொதுவெளியில் கவனத்துடன் பேச வேண்டும் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக அமைச்சரவைக் கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி வருகிற 7-ந் தேதி 2-ம் ஆண்டை நிறைவு செய்து 3-ம் ஆண்டை தொடங்குகிறது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவையின் 12-வது கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் துறை வாரியாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்தும் முதலீடுகளை ஈர்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அறிவுரைகளை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில் பொதுவெளியில் கவனத்துடன் பேச வேண்டும் எனவும், மூத்த அமைச்சர்கள் பேசுவது சமூக ஊடகங்களில் பரவுவதை காண முடிகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.