”மாபெரும் காது குத்தும் விழா” அழைப்பிதழுடன் அதிமுக
தமிழ்நாடு பட்ஜெட் என்பது காது குத்தும் விழா என்று அதிமுக உறுப்பினர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
மேலும், சட்டப்பேரவைக்கு வருகைதந்த அதிமுக உறுப்பினர்கள் அழைப்பிதழை கொண்டுவந்தனர்.
அந்த அழைப்பிதழில், “மாபெரும் காது குத்தும் விழா, கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்விழாவிற்கு தலைமை தாங்குபவர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், மாண்புமிகு நிதியமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் முன்னின்று காது குத்துவார்.
மேற்படி விழாவில் கூவம் சுத்திகரிப்பிற்கு நிதி, சென்னை மழைநீர் வடிகால் திட்டத்திற்கு நிதி, சிங்கார சென்னை திட்டத்திற்கு நிதி என்று விதவிதமாக காது குத்தப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.
பி.கு- சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என பல்வேறு முறைகளில் மொய் வைக்கலாம்.
