தமிழ்நாடு பட்ஜெட்; முக்கிய அறிவிப்புகள் - பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்!

Government of Tamil Nadu Budget 2023
By Sumathi Mar 20, 2023 04:15 AM GMT
Report

தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

 பட்ஜெட்

தமிழ்நாடு அரசின் 2022-2023ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை சட்ட மன்றத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்கிறார். இன்று காலை காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழ்நாடு பட்ஜெட்; முக்கிய அறிவிப்புகள் - பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்! | Tamil Nadu Budget 20Th March 2023

மகளிருக்கான மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டம் இன்று அறிவிக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால் யார் யார் இந்த திட்டத்தின் பயனாளிகள், அதை எவ்வாறு தேர்ந்தெடுக்கப் போகிறார்கள், அரசு ஊழியர்களின் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு இந்த திட்டம் கிடைக்கப் பெறுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

அறிவிப்புகள்? 

அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 7ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த அறிவிப்புகளும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

மேலும், அதிமுக உட்கட்சி மோதல் தொடர்ந்து வரும் நிலையில் ஓபிஎஸ் இருக்கையை மாற்ற வேண்டும் என்ற இபிஎஸ் தரப்பு கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு புறக்கணித்த நிலையில், என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.