நடிகராக களம் இறங்கிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கன்னட படம் ஒன்றில் பயிற்சியாளராக நடித்துள்ளார்.
கன்னட மொழியில் உருவாகியுள்ள அரபி என்ற இப்படத்தில் இரண்டு கைகளையும் இழந்த நிலையிலும் விடாமுயற்சியினால் சர்வதேச அளவில் நீச்சலில் சாதனை படைத்த பாரா நீச்சல் வீரர் விஸ்வாஷின் வாழ்க்கையை கருபொருளாக வைத்து உருவாகி வருகிறது.
இந்த படத்தை பிரபல கன்னட இயக்குநர் ராஜ்குமார் இயக்கி வருகிறார்.இப்படத்தை ஸ்ரீவிஜய ராகவேந்திரா புரடொக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் தமிழ்நாடு பாஜக தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, விஸ்வாஷின் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார்.
இப்படத்திற்காக இயக்குனர் ராஜ்குமார், அண்ணாமலையை அனுகியபோது படத்தின் கதை கேட்டு பிடித்து போன அண்ணாமலை இதில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டு, சம்பளமாக ரூ.1 பெற்றுக் கொண்டு நடித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
அரபி படத்தின் டீசர் நேற்று மாலை 4 மணிக்கு வெளியாக இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.