ரூ.199தான்.. 1 கோடி வீடுகளுக்கு அதிவெக இண்டர்நெட் - எப்போது தொடக்கம் தெரியுமா?
தமிழகத்தில் வீடுகளில் அதிவேக இணையதள வசதி தொடங்கப்படவுள்ளது.
பாரத் நெட்
மத்திய அரசு 'பாரத் நெட்' திட்டத்தின் கீழ் அனைத்து கிராமப்புறங்களுக்கும் அதிவேக இணையதள சேவை வழங்கும் திட்டத்தை நாடு முழுவதும் தொடங்கியது.
இந்த திட்டம், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. 11 ஆயிரத்து 800 கிராமங்களில் பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டன.
இதுவரை சுமார் 4 ஆயிரம் கிராமங்களில், இணையதள சேவை வழங்குவதற்கான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்புகள் https://tanfinet. tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் மேலும் 4 ஆயிரம் கிராமங்களுக்கு வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.
இணையதள வசதி
இந்த ஆண்டுக்குள் மட்டும் ஒரு கோடி வீடுகளுக்கு அதிவேகத்தில் இணையதள சேவை கொடுக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வீடுகளுக்கு குறைந்தபட்சமாக ரூ.199 கட்டணத்தில், 20 எம்.பி.பி.எஸ் (Mpbs) வேகத்தில் அளவில்லா இணையதள சேவை வழங்கப்படுகிறது.
மேலும், ரூ.399 மற்றும் ரூ.499 திட்டமும் வழங்கப்பட உள்ளது. வணிக நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு ரூ.899 மற்றும் ரூ.1,199 என்ற இரு திட்டங்கள் செயல்பட உள்ளன. அடுத்த மாதத்தில் இணைப்புகள் வழங்கும் பணி தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.