தமிழகம் மீண்டும் இருளில் மூழ்கத் தொடங்கியுள்ளது - முன்னாள் அமைச்சர் ஆவேசம்!

tamilnadu powercut kcveeramani
By Irumporai Jun 18, 2021 12:35 PM GMT
Report

திமுக ஆட்சியில் தமிழகம் மீண்டும் இருளில் மூழ்கத் தொடங்கியிருப்பதாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மக்களுக்கு இலவச அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி.

10 ஆண்டுகளுக்கு முன்னர் திமுக ஆட்சியில் தமிழகம் இருளில் மூழ்கியிருந்தது. அதிமுக அரசு வந்த பிறகுதான்  இந்த நிலை மாறியது எனவும் தற்போது தமிழகம் மீண்டும் இருளில் மூழ்க தொடங்கியுள்ளது என்று குற்றஞ்சாட்டினார்

. தொடர்ந்து பேசிய அவர்,  அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேட நினைக்கும் சசிகலாவின் முயற்சி பலிக்காது என்று கூறினார்.