மோடிக்கு அந்த பயம் இருக்கட்டும் : ஜோதிமணி எம்.பி

modi tamilnadu jyotimanimp
By Irumporai Jan 07, 2022 05:29 AM GMT
Report

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 12-ஆம் தேதி பாஜக சார்பில் மதுரையில் மோடி பொங்கல் விழா நடைபெற உள்ளதாகவும், இதில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்றும் பாஜக தமிழக பாஜக ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பேட்டியளித்திருந்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வந்த பிறகு எதிர்நின்று திரும்பிப்போக வைப்பது ஒரு விதம்.வராமலே தடுத்து நிறுத்துவது இன்னொருவிதம்.தமிழகம் இரண்டாவது பெருமையை தட்டிச்செல்கிறது! அந்த பயம் இருக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.