ஒலிம்பிக்கில் பங்குபெறும் தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை; முதலமைச்சர் அறிவிப்பு!
ஒலிம்பி க் போட்டிகளில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக வீரர்கள் 5 பேருக்கு தலா 5 லட்ச ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் சார்பில் வெளியிட்டுள்ள ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.
இதில், பங்கேற்க தமிழகத்தில் இருந்து 5 பேர் தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு விளையாட்டில் ஆர்வத்தைப் பெருக்கவும் அவர்கள் தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்கு கொள்ளவும் அரசு தேவையான பயிற்சிகளையும், ஊக்கத்தொகையையும் தொடர்ந்து வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
[
அந்த வகையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதிபெற்றுள்ள தடகள வீரர், வீராங்கனைகளான எஸ். ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, சுபா வெங்கடேசன், தனலஷ்மி சேகர் மற்றும் ரேவதி வீரமணி ஆகிய 5 பேருக்கும் தமிழ்நாடு அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாகத் தலா 5 லட்ச ரூபாய் வீதம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது