‘‘நல்லாதான் விளையாண்டேன் ஆனால் ..மன்னித்துவிடுங்கள்’’ : தமிழக வீராங்கனை உருக்கம்

tamilnadu olympics bhavanidevi
By Irumporai Jul 26, 2021 11:45 AM GMT
Report

தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி, தமிழ்நாட்டின் பாரம்பரிய கலையான வாள்வீச்சில் பயிற்சி பெற்று சர்வதேச அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்த நிலையில் பவானி தேவி டோக்கியோ மாநகரில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டார்.

இவர் இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வீராங்கனையாவார்.

முதல் போட்டியில் நாடியா அசிசீயை 15/3 என்ற கணக்கில் இவர் வென்றார். இதனால் இரண்டாவது போட்டிக்கான எதிர்பார்ப்பு கூடியது.

இரண்டாவது போட்டியில் உலக தரவரிசையில் 3ஆவது இடத்தில் இருக்கும் மனோன் புரூனெட்டுடன் மோதினார்.

அவருடன் 7/15 என்ற கணக்கில் தோல்வியினை தழுவினார் இதனால் வாள்வீச்சில் இந்தியாவிற்கான பதக்க கனவு கலைந்தது.

தனது தோல்வி குறித்து ட்விட்டர் பக்கத்தில் இது எனக்கு மிகப் பெரிய நாள். உற்சாகமாகவும் உணர்வுபூர்வமாகவும் உணர்கிறேன்.

நான் என்னுடைய மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். ஆனால் வெற்றி பெற முடியவில்லை.

அதற்காக நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் எனக்கு ஊக்கமளித்தஅனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம பதக்கம் வென்று எனது நாட்டை பெருமையடைய செய்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்